'பீஸ்ட்' படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்குகிறார், நெல்சன். 'ஜெயிலர்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாகவும், இதற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் செட் எல்லாம் போட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ரஜினியை வைத்து நெல்சன் படம் இயக்கப்போகிறார் என்று சொன்னதுமே, ’எப்படி ரஜினி இதற்கு ’ஓ.கே’ சொன்னார்?, பீஸ்ட் படம் ஓடவில்லை’’, என்றெல்லாம் சமூக வலைதளங்களில் நெல்சனை வாட்டி வதைத்தனர். ஒருவழியாக இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார், ரஜினிகாந்த்.
'அண்ணாத்த' படத்திற்குப் பிறகு ரஜினி ஓய்வு எடுத்து வருகிறார். இதற்கிடையில் நெல்சன் கதையை மெருகேற்றிக் கொண்டிருந்தார். கடைசியாக ’ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் மாதம் சூட்டிங் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்பொழுது ஒரு பெரிய குண்டு நெல்சனின் ஆசையில் விழுந்துள்ளது. இப்பொழுது ஹைதராபாத்தில் சினிமாத்துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துவிட்டனர்.
அதாவது, தெலுங்கு படத்தொழிலாளர்கள் சம்மேளனம் தங்களுக்கு 45 விழுக்காடு கூலி உயர்வு வேண்டி, வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்கவுள்ளனர். இதுதான் இப்போது நெல்சனுக்கு பெரிய தலைவலியைக் கொடுத்துள்ளது.
இதையும் படிங்க:’என் ரசிகர்கள் யாரும் ’ப்ளூ சட்டை’ மாறனிற்கு செருப்பு மாலை போடவில்லை..!’ - பார்த்திபன்