லாஸ் ஏஞ்சல்ஸ்:பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, தமிழ், இந்தி, பாலிவுட் என பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் பிரபல ஹாலிவுட் நடிகரும் பாடகருமான நிக் ஜோனஸை, கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தினங்களில் முறையே கிறித்துவ மற்றும் இந்து மத முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
இதனையடுத்து டெல்லி மற்றும் மும்பை ஆகிய 2 இடங்களில், பிரியங்கா - நிக் தம்பதியின் திருமண வரவேற்பு நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 2022, ஜனவரியில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக பிரியங்கா சோப்ரா அறிவித்தார். இருப்பினும், குழந்தையின் முகத்தை கடந்த ஒரு வருடமாக வெளியில் காட்டாமலே இருந்தார்.