பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, 2018ஆம் ஆண்டு ஜோத்பூரில் நிக் ஜோனஸ் என்னும் ஹாலிவுட் நடிகரை இந்து மற்றும் கிறித்தவ முறைப்படி திருமணம் செய்தார். அதைத்தொடர்ந்து கடந்த ஜனவரியில், மால்டி மேரி என்ற குழந்தையை வாடகைத்தாய் மூலம் பெற்றுக் கொண்டதாக இருவரும் அறிவித்தனர்.
இந்த நிலையில் நேற்றைய முன் தினம் (அக் 24) உலகெங்கிலும் தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டது. இந்த தீபாவளியை பிரியங்கா சோப்ரா, தனது கணவர் நிக் ஜோனஸ் மற்றும் அன்பு மகள் மால்டி மேரியுடன் கொண்டாடி உள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை நிக், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.