தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சிபிஐ அதிகாரியாக பிரியாமணி நடிக்கும் "DR 56" - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

இயக்குநர் ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கத்தில் நடிகை பிரியாமணி நடித்துள்ள "DR 56" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சிபிஐ அதிகாரியாக பிரியாமணி நடிக்கும் "DR 56"
சிபிஐ அதிகாரியாக பிரியாமணி நடிக்கும் "DR 56"

By

Published : Oct 18, 2022, 6:54 PM IST

இயக்குநர் ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கத்தில் ஸ்ரீ லட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் A.N. பாலாஜி வழங்க , ஹரி ஹரா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் படம் "DR 56” . இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாக உள்ளது.

தேசிய விருது பெற்ற பிரபல நடிகை பிரியாமணி இந்த படத்தின் நாயகியாக நடித்துள்ளார், மேலும் பிரவீன், தீபக் ராஜ் ஷெட்டி, ரமேஷ் பட், யத்திராஜ், வீணா பொண்னப்பா, மஞ்சுநாத் ஹெக்டே, சுவாதி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஸ்ரீ லட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் A.N. பாலாஜி இந்த படத்தின் அனைத்து உரிமைகளையும் வாங்கியிருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் அவரே படத்தை வெளியிட இருக்கிறார். இந்த படத்திற்கு கன்னடத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ’சார்லி 777’ படத்திற்கு இசையமைத்த நோபின் பால் இசையமைக்கவுள்ளார். படம் பற்றி இயக்குநர் ராஜேஷ் ஆனந்த் லீலா பாகிர்ந்தவை,

இது அறிவியல் சார்ந்த கிரைம் திரில்லர். தற்போது சமூகத்தில் நிலவிவரும் உண்மைச் சம்பவங்களை கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறோம். ப்ரியாமணி CBI அதிகாரியாக நடித்துள்ளார். இந்த கதையை சொல்லும்போதே ப்ரியாமணி மிகவும் பிரம்மிப்பானார். நேர்த்தியான CBI அதிகாரியாக நடிக்க தன்னை முற்றிலும் தயார்படுத்திக் கொண்டார்.

படம் தமிழ், கன்னடத்தில் நேரடியாக எடுத்ததால் ஓரே காட்சிகளை மாற்றி மாற்றி எடுப்பதில் சவாலாக இருந்தது. விறுவிறுப்பான திரைக்கதை ரசிகர்களை அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை தூண்டும். ப்ரியாமணி தனது திருமணத்திற்கு பிறகு நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இது” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:இந்திய சர்வதேச சுற்றுலா மாநாடு விருதை வென்ற “தள்ளிப் போகாதே”

ABOUT THE AUTHOR

...view details