தமிழ்நாடு

tamil nadu

’தளபதி 67’ல் பிரியா ஆனந்த்?

By

Published : Dec 10, 2022, 7:11 PM IST

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள ’தளபதி 67’ திரைப்படத்தில் நடிகை பிரியா ஆனந்த் இடம் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

’தளபதி 67’ல் பிரியா ஆனந்த்?
’தளபதி 67’ல் பிரியா ஆனந்த்?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படமான ‘தளபதி 67’ படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ மூலம் லலித்குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் நடிப்பதாக பல்வேறு நடிகர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. ஆனால் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வரவில்லை.

இந்நிலையில், நடிகை பிரியா ஆனந்த் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரியா ஆனந்த் தமிழில் ’வாமனன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தியிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ’தளபதி 67’ படத்தின் பூஜையில் பிரியா ஆனந்த் கலந்துகொண்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அப்படத்தில் இவரும் இடம்பெற்றுள்ளாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எதுவாக இருந்தாலும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே தெரிய வரும்.

இதையும் படிங்க: யோகி பாபுவுக்கு சர்ப்ரைஸாக பேட் பரிசளித்த விஜய்!

ABOUT THE AUTHOR

...view details