சிவகார்த்திகேயன், புதுமுக நடிகை மரியா ரியாபோஷப்கா, சத்யராஜ், உள்ளிட்டோர் நடித்த “பிரின்ஸ்” திரைப்படத்தின் ''பிம்பிளிக்கி பிளாப்பி' எனும் முதல் பாடல் நாளை (செப். 1) வெளியாகவுள்ளது. பிரபல தெலுங்கு சினிமா இயக்குநர் அனுதீப் கேவி இத்திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
இந்தப் பாடலின் ப்ரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ''பிரின்ஸ்'' திரைப்படம் சிவகார்த்திகேயன் நடிக்கும் 20ஆவது படமாகும். கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்து வெளியான டாக்டர், டான் உள்ளிட்ட திரைப்படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.