விடா முயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்தும் 'பிரல்ஹாத்'(pralhad) குறும்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தை ஃபினோலெக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தக் குறும்படம், ’பிரல்ஹாத்’ எனும் 14 வயது சிறுவன் எப்படித் தன் வாழ்க்கை பயணத்தை மாற்றி தனக்கான வளத்தை உருவாக்கிக் கொண்டான் என்பதை விரிவாக விவரிக்கிறது.
இந்தக் குறும்படம், மறைந்த இந்தியாவின் மாபெரும் தொழிலதிபரும் ஃபினோலெக்ஸ்(Finolex) நிறுவனத்தின் நிறுவருமான ஸ்ரீ பிரல்ஹாத் பி சாப்ரியா வின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்டையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இவர் இந்தியாவின் மக்கலிடையே மிகுந்த நம்பத்தக்க ஓர் தொழிலதிபராவார். அதே போல, இவர் நிறுவிய ஃபினோலெக்ஸ் நிறுவனத்தின் pvc பைப்களும் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தவைகளாகும்.
இவர் தொடர்பாக கடந்த செப்.1ஆம் தேதி யூடியூபில் ஸ்பாங் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் ஃபினோலெக்ஸ் நிறுவனம் இணைந்து ஒரு குறும்படத்தைத் தயாரித்து வெளியிட்டது. இந்தக் குறும்படம், இனி வரும் இளம் தலைமுறையினரையும், தொழில்முனைவோரையும், ஊக்குவிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், மறைந்த மாபெரும் தொழிலதிபர் பிரல்ஹாத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இத்திரைப்படம் அமைந்துள்ளது.
இந்தக் குறும்படத்தின் கதை 1945 காலகட்டத்தின் பின்னணியில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. அமிர்ஸ்தரைச் சேர்ந்த 14 வயது சிறுவனான பிரல்ஹாத்தை மையமாகக் கொண்டே இக்குறும்படம் நகர்கிறது. அச்சிறுவனின் தந்தை மறைவிற்கு பின், அவனின் குடும்ப பாரம் முழுவதும் அவனின் பிஞ்சுத் தோள்களில் ஏறுகிறது. அங்கிருந்து ஆரம்பமாகிறது ஓர் அக்னிக் குஞ்சின் பயணம். 10 ரூபாயில் தொடங்கப்பட்ட இந்தப் பயணம் 10,000 கோடியாக மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கியதாக இந்தப் படம் நிறைவடைகிறது.
மனித உணர்ச்சி சிக்கல்களையும், தைரியத்தின் அவசியங்களையும் இக்குறும்படம் சற்று விரிவாக விவரிக்கிறது. ஒரு எளிய மனிதனின் அறிவுத் திறன் மற்றும் அவனின் போராட்டங்களை எடுத்துரைக்கிறது. மேலும், இந்த ‘பிரல்ஹாத்’ குறும்படத்திற்கு உலகளவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தக் குறும்படம் இணைத்தில் வெளியான மறுநாளே ‘#Celebratingpralhad' என்ற ஹாஸ்டேக் இணையமெங்கும் டிரெண்ட் ஆனது.
திரையுலக வட்டாரங்கள், சமூக வலைதளங்கள், விமர்சகர்கள், என அனைத்து தரப்பினரிடத்தும் இந்தத் திரைப்படத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து. இந்தப் படம் குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் ஹர்ஷில் கரியா கூறுகையில், “நாங்கள் தொடர்ந்து சொல்ல வேண்டிய ஆற்றல் மிக்கக் கதைகளையேத் தேடி வருகிறோம். ஃபினோலெக்ஸ் நிறுவனத்தின் நிறுவர் பிரல்ஹாத் பி சாப்ரியாவின் வாழ்க்கை மிகுந்த உத்வேகத்தைத் தரக்கூடியது. அதைக் குறும்படமாக உலகத்துடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்தப் படத்தை தயாரித்த பினோலெக்ஸ் குழுமம் நாட்டின் மிகப்பெரும் பிளம்மிங் உற்பத்தி செய்யும் குழுமம். மேலும், இந்நிறுவனம் பல துறைகளைக் கொண்டுள்ளது. மின் மற்றும்தொலைதொடர்பு பொருட்கள், கேபிள்கள், மற்றும் இதுபோன்ற பல பொருட்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் தன் மிகுந்த செறிவூட்டலை மேலும் தொடர்கிறது. தனது பலத்த முதலீடுகளின் மூலம் நிறுவனத்தின் வலிமையும் வலுப்படுத்தி வருகிறது. இதன் தரம், மூலப் பொருட்கள் மூலம் உற்பத்தி சேமிப்பு, போக்குவரத்து, விற்பனை, என அனைத்துத் துறைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளது. ஒரு வெற்றிகரமான தொழிலதிபரின் மனநிலையும் சிந்தனை செயல்முறையும் ‘பிரல்ஹாத்’ கதையில் எதிரொலிப்பதை நம்மால் காண முடியும்” என்றார்.
யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தைக் கீழே காணலாம்.
இதையும் படிங்க: கவிஞர் கபிலன் வைரமுத்து எழுதிய புதிய நாவல்... இவர்களைப்பற்றிய கதையா இது!