பிரதமர் மோடி சாலையை சுத்தம் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், மறுபக்கம் அந்த ஃபோட்டோ சூட் செய்யும் காணொலி ஒன்று ஓர் தனியார் சேனலில் வெளியாகி விமர்சனத்திற்குள்ளானது.
இந்நிலையில், தற்போது நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''கேமரா ஆங்கிள்களை கையாளுவதில் நம்ம இயக்குநர் மற்றும் நடிகரை யாரேனும் மிஞ்ச முடியுமா என்ன..?'' என பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிடும் வகையில் வாசகத்துடன் அந்த காணொலியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.