பிரபல நடன இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா தற்போது ’மை டியர் பூதம்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுவரை மீசையை எடுக்காத பிரபுதேவா இந்த படத்திற்காக மீசை எடுத்தது குறித்து வீடியோ ஒன்றை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், சின்ன வயதிலிருந்து தாடி வைத்துள்ளேன். ஏன் தாடியை எடுக்க மாட்டிங்களா என பலர் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். நானும் பல காரணங்களை கூறி கடந்து விடுவேன். ஆனால் மை டியர் பூதம் படத்தின் போது, படத்தின் இயக்குநர் மீசை, தாடியினை எடுக்க வேண்டும் என கூறினார்.