தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பிரஷாந்த் நடிக்கும் 'அந்தகன்' திரைப்படத்தில் இணைந்த பிரபுதேவா! - தியாகராஜன்

நடிகர் பிரஷாந்த் நடிக்கும் 'அந்தகன்' திரைப்படத்தில், ஒரு பாடலுக்கு இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா நடனம் அமைக்க உள்ளார்.

பிரஷாந்த் நடிக்கும்  திரைப்படத்தில் இணைந்த பிரபுதேவா
பிரஷாந்த் நடிக்கும் திரைப்படத்தில் இணைந்த பிரபுதேவா

By

Published : Nov 1, 2022, 6:49 PM IST

சென்னை:பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி பம்பர் ஹிட் அடித்த திரைப்படம் 'அந்தாதூன்'. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் பல்வேறு பிரிவுகளில் தேசிய விருதையும் பெற்றது.

இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் கைப்பற்றி, தனது மகன் பிரஷாந்தை வைத்து 'அந்தகன்' என்ற பெயரில் தயாரித்து வருகிறார்.

பிரஷாந்த்தின் தந்தையும் நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் தயாரித்து இயக்கி வருகிறார். இப்படத்தில் சிம்ரன், சமுத்திரக்கனி, யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கிய நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் ‘ரோரா புஜ்ஜி’ பாடலை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் சந்தோஷ் நாராயணன் இசையில் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடலுக்கு இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா நடனம் அமைக்க உள்ளார்.

பிரஷாந்த், அனிருத், சிம்ரன், பிரியா ஆனந்த் மற்றும் ஐம்பது நடனக் கலைஞர்கள் ஆடும் இந்த பாடல் காட்சிக்காகப் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தப் பாடல் காட்சி முடிந்தவுடன் ‘அந்தகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. மேலும், இந்தப் படத்தைத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு உலகமெங்கும் திரையிடத் திட்டமிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நடிகர் சுதீர் பாபு நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details