சென்னை:இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான 'சலார்- பார்ட் 1 சீஸ்ஃபையர்' படத்தினை தயாரித்து வரும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ், படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. இப்படம் நேற்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென வெளியீட்டு தேதி மாற்றப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹோம்பாலே ஃபிலிம்ஸ், 'சலார் பார்ட் 1 சீஸ்ஃபையர்' படத்தின் டீசரை வெளியிட்டதிலிருந்து பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, டிசம்பர் 22ஆம் தேதியன்று 'சலார் பார்ட் 1 சீஸ் ஃபையர்' படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.