தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பிரபாஸின் 'சலார்' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் - தயாரிப்பு நிறுவனம் கொடுத்த அதிரடி அப்டேட்! - prabhas salaar movie release postponed

Salaar movie release postponed: பிரபாஸ் நடிப்பில் இம்மாதம் இறுதியில் வெளியாக இருக்கும் 'சலார்' படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது

prabhas-salaar-movie-release-postponed
சலார் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 1:08 PM IST

ஐதராபாத்: பிரசாந் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்துள்ள 'சலார்' படம் செப்டம்பர் மாதம் 28ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் படத்தின் வெளியீடு தேதி தள்ளிபோக உள்ளதாக தனது X தளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரிப்பில் ‘கேஜிஎஃப் 2’ படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள படம் ‘சலார்’. இப்படத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியானது.

படம் வெளியீடு தேதியில் மாற்றம் உள்ளதாக இணையத்தில் பல செய்திகள் பரவி வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக படம் வெளீயிடு தேதி குறித்து ஹோம்பாளே பிலிம்ஸ் X தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், “படத்திற்காக நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. செப்டம்பர் 28ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:HBD KARTHIK : தமிழ் சினிமாவின் நவரச நாயகன் கார்த்திக்... பிறந்த தினம் இன்று!

படத்தை உங்களிடம் உயர் தரத்தில் கொடுக்க வேண்டும் என படக்குழுவினர் அயராது உழைத்து வருகின்றனர். புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும். சலார் படத்தின் இறுதி கட்ட பணிகளில் எங்களுடன் நீங்கள் இருங்கள். இந்த பயணத்தில் எங்களுடன் இருந்ததற்கு மிக்க நன்றி” எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், படத்தின் வெளியீடு தேதி மாற்றத்தை இன்னும் படக்குழுவினர் அறிவிக்கவில்லை. சலார் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது. மேலும், இப்படம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாக இருந்த நிலையில் தமிழில் அன்றைய தேதியில் 5 படங்கள் வெளியாக உள்ளது.

சலார் படத்தின் பணிகள் இன்னும் முடிவடையாததால் படத்தின் வெளியீடு தேதி தள்ளிவைக்கப்பட்டதால், நடிகர் பிரபாஸின் நடிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளதாக கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க:"நம்ப முடியாத ஒன்னாருந்தாலும் அதான் உண்மை"; ரத்தம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details