ஹைதராபாத்: பாகுபலி திரைப்படம் மூலம் உலகப்புகழ் பெற்ற நடிகர் பிரபாஸ், தற்போது ஓம் ராவத் இயக்கத்தில் "ஆதிபுருஷ்" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ராமாயணத்தை மையமாக கொண்ட இப்படத்தில் நடிகர் பிரபாஸ் ராமனாகவும், நடிகை கீர்த்தி சனோன் சீதையாகவும் நடிக்கின்றனர்.
ஆதிபுருஷ் படப்பிடிப்பின் போது பிரபாஸுக்கும், கீர்த்தி சனோனுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும், இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதனை நடிகை கீர்த்தி சனோன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இதனிடையே கடந்த சில நாட்களாக பிரபாஸ் - கீர்த்தி சனோன் காதல் தொடர்பான செய்திகள் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதன்படி, இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துவிட்டதாகவும், அடுத்த வாரம் காதலர் தினத்தையொட்டி மாலத்தீவில் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், பிரபாஸ் - கீர்த்தி காதல் தொடர்பாக வெளியான செய்தி வெறும் வதந்தி என பிரபாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபாஸும், கீர்த்தி சனோனும் நெருங்கிய நண்பர்கள்தான் என்றும், அவர்களைப்பற்றி பரவி வரும் தகவல் எதுவும் உண்மையில்லை என்றும் பிரபாஸின் நெருங்கிய வட்டாரங்கள் விளக்கமளித்துள்ளன.
இதையும் படிங்க: என்ன சொல்றீங்க லியோவில் இருந்து விலகலா? - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா!