சென்னை:இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் ஹீரோவாக நடிக்கும் பவுடர் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று(அக்-2) சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். இப்படத்தில் மோகன் - குஷ்பு முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கின்றனர்.
நிகில் முருகன் ஹீரோவாக நடிக்கும் 'பவுடர்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா - Public communicator Nikhil Murugan
மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றூ (அக்-2) சென்னையில் நடைபெற்றது.
![நிகில் முருகன் ஹீரோவாக நடிக்கும் 'பவுடர்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா பவுடர் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-16539210-thumbnail-3x2-a1.jpg)
பவுடர் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
இப்படத்தை ஜீ மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த விழாவில் இயக்குநர் பாக்யராஜ், பிரபுசாலமன் எழில், அறிவழகன் மற்றும் சசி ஆகியோரும், நடிகர்கள் ரோபோ சங்கர், வையாபுரி, கூல் சுரேஷ் மற்றும் ஆதவன் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஓர் இரவில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைத்து திரில்லராக இப்படம் உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:விஷாலின் "லத்தி" - முதல் பாடல் வெளியீட்டுத்தேதி அறிவிப்பு!