மலையாளத்தில் கடந்த ஆண்டு ஜூலை 29ஆம் தேதி இயக்குநர் ஜோஷி இயக்கத்தில் வெளியான திரைப்பட்டம் ‘பாப்பன்’. நடிகர் சுரேஷ் கோபி நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு, ஜோஷி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘ஆண்டனி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் ஜோஷி இயக்கி வெளியான “பொரிஞ்சு மரியம் ஜோஸ்” படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த ஜோஜு ஜார்ஜ், நைலா உஷா, செம்பன் வினோத் ஜோஸ், விஜயராகவன் ஆகியோர்கள் தான் இந்த “ஆண்டனி” படத்திலும் நடிக்கவுள்ளனர். இது இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பாகும். இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் ஆஷா சரத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஜோஜு ஜார்ஜ், ஜோஷி கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் தான் "பொரிஞ்சு மரியம் ஜோஸ்". கட்டாளன் பொரிஞ்சு என்ற கதாபாத்திரத்திற்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மீண்டும், ஜோஷி மற்றும் ஜோஜு ஜார்ஜ் ஜோடி எதிர்பார்ப்புகளை இரட்டிப்பாக்கியது. ‘இரட்டா’ படத்திற்குப் பிறகு ஜோஜு ஹீரோவாக நடிக்கிறார்.