தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'என்னிடம் கடுமையாக நடந்துகொண்ட விமானப்பணியாளர்..!' - பூஜா ஹெக்டே ட்விட்டரில் புகார் - பூஜா

தன்னிடம் ஒரு விமானப் பணியாளர் கடுமையாக நடந்து கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை பூஜா ஹெக்டே பதிவிட்டுள்ளார்.

’என்னிடம் கடுமையாக நடந்துகொண்ட விமானப் பணியாளர்..!’ - பூஜா ஹெக்டே ட்விட்டரில் புகார்
’என்னிடம் கடுமையாக நடந்துகொண்ட விமானப் பணியாளர்..!’ - பூஜா ஹெக்டே ட்விட்டரில் புகார்

By

Published : Jun 9, 2022, 7:29 PM IST

சமீபத்தில் வெளியான 'பீஸ்ட்', 'ராதே ஷியாம்' போன்ற முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்தவர், நடிகை பூஜா ஹெக்டே. இவர் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என அனைத்து திரைப்படத் துறைகளிலும் பிரபலமானவர்.

இந்நிலையில், இன்று(ஜூன் 9) அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் பயணித்த விமானத்தின் பணியாளர் ஒருவர் குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில், 'மும்பையில் இருந்து நாங்கள் பயணித்த விமானத்தின் பணியாளரான 'விபுல் நகஷே' எனும் நபரின் நடவடிக்கை எங்களை மிகவும் மனவேதனைக்குள்ளாக்கியுள்ளது. எந்த வித காரணமின்றியும் அவர் எங்களிடம் மிகவும் கடுமையாக, மிரட்டும் தொனியில் நடந்து கொண்டார்.

பொதுவாக நான் இப்படிப்பட்ட பிரச்னைகள் குறித்து பதிவிடுவதில்லை. ஆனால், இச்சம்பவம் மிகவும் திகைப்பூட்டியுள்ளது' என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ''விஜயை 'தளபதி அய்யா' எனக் கூறியது பாசத்தினால் மட்டுமே..!'' - கமல்ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details