மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கியின் நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இதன் முதல் பாகம் இந்தாண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சென்னையில் நடைபெற்ற டீசர் வெளியீட்டு விழாவில் கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, சரத்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது விக்ரமிற்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவரால் கலந்துகொள்ள இயலவில்லை.
இதனிடையே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வதந்தி பரவ தொடங்கியது. ஆனால் அவருக்கு லேசான நெஞ்சு வலி தான் என கூறி விக்ரமின் மகன் தெரிவித்தார்.