இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படத்தில் நடித்துள்ள விக்ரம், திரிஷா, கார்த்தி, ஜெயராம் ஆகியோர் ஒன்றாக சென்னை நெக்ஸஸ் ஃபோரம் மாலில் ரசிகர்களோடு படம் பார்த்தனர்.
படம் இன்று வெளியானதையடுத்து திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் படத்தில் நடித்த நட்சத்திரங்களும் ரசிகர்களோடு திரையரங்கில் படத்தை பார்த்தது ரசிகர்களை மேலும் உற்சாகம் அடைய செய்துள்ளது.