பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், லைகா புரொடக்ஷென்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் “பொன்னியின் செல்வன் பாகம்-1" திரைப்படம் செப்.30ஆம் தேதி அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (செப்.6) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றுவருகிறது. ஆனால், விழா தொடங்குவதற்கு முன்பாகவே படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன.
பொன்னியின் செல்வன்- பாகம் -1 பாடல்கள் இப்படத்தில் ஆறு பாடல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாகவே இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், தற்போது 'அலைகடல், சொல், தேவராளன் ஆட்டம் மற்றும் ராட்சஸ மாமனே' எனும் நான்கு பாடல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க:ஓடிடியில் வெளியாகும் 'சீதா ராமம்'