தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பொன்னி நதி பாக்கனுமே...பொழுதுக்குள்ள... வெளியானது "பொன்னியின் செல்வன்" - fdfs

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள "பொன்னியின் செல்வன்" படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் இன்று வெளியானது.

பெரும் எதிர்பார்ப்புகளக்கு மத்தியில் வெளியானது "பொன்னியின் செல்வன்"
பெரும் எதிர்பார்ப்புகளக்கு மத்தியில் வெளியானது "பொன்னியின் செல்வன்"

By

Published : Sep 30, 2022, 7:03 AM IST

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. திரிஷா ஐஷ்வர்யா ராய், ஜெயராம், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு ஐஷ்வர்யா லட்சுமி என பெரும் நட்சத்திரப்பட்டாளம் நடித்துள்ளனர்.

1950களில் கல்கி எழுதிய ’பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி அதனை திரைப்படமாக எடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பலரும் எண்ணி வந்த நிலையில், இயக்குநர் மணிரத்னம் பலரின் கனவை நனவாக்கியுள்ளார்.

தமிழர்களின் பண்டைய கால வாழ்வியல், பாரம்பரியம், சோழர்களின் ஆட்சிகாலம் என நம் வரலாறுகளை கூறும் வகையில் நாவல் அமைந்திருக்கும் எனவே, இந்த படம் குறித்து முதல் அறிவிப்பு வந்தது முதல் படத்திற்கான எதிர்பார்ப்புகள் எகிறிவிட்டன.

இப்படி பல எதிர்பார்ப்புகளுடன் பலரின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மேலும், I MAXல் வெளியாகும் முதல் தமிழ் படம் என்ற பெருமையையும் தனதாக்கிக்கொண்டுள்ளது.

இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதையும் படிங்க:பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இணையத்தில் வெளியிடத் தடை

ABOUT THE AUTHOR

...view details