தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

’'Game of thrones'-ஐ விட நம் பொன்னியின் செல்வன் மேல்..!’ - நடிகர் கார்த்தி - கார்த்தி

வெளிநாட்டு வெப் சீரிஸான ‘Game lod thrones'-ஐ விட நம் பொன்னியின் செல்வன் மேல் என நடிகர் கார்த்தி பேசியுள்ளார்.

’'Game of thrones'-ஐ விட நம் பொன்னியின் செல்வன் மேல்..!’ - கார்த்தி
’'Game of thrones'-ஐ விட நம் பொன்னியின் செல்வன் மேல்..!’ - கார்த்தி

By

Published : Sep 28, 2022, 3:56 PM IST

பொன்னியின் செல்வன் படத்தின் விளம்பரத்திற்காக திருவனந்தபுரம், மும்பை, ஐதராபாத், பெங்களூரூ, டெல்லி சென்ற நடிகர்கள் கார்த்திக், ஜெயம் ரவி, நடிகை திரிஷா ஆகியோர் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் நடிகர் கார்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“பொன்னியின் செல்வன் தமிழ்நாட்டின் பெருமை. முதல் முறையாக நமது படத்தை இந்திய முழுவதும் சென்று விளம்பரப்படுத்தியது மகிழ்ச்சியாக உள்ளது. செல்லும் இடங்களில் மிகுந்த வரவேற்பு இருந்தது. கேரளாவில் தொடங்கி டெல்லி வரை சென்று வந்துள்ளோம்.

படம் வெளியாக இன்னும் 2 நாட்கள் தான் உள்ளது. எவ்வளவு பதற்றமாக இருந்தாலும் மிகுந்த மகிழ்ச்சியாகவும் உள்ளது. மக்களுடன் சேர்ந்து படம் பார்க்க எங்களுக்கும் ஆவலாக இருக்கிறது. சோழர்களின் வரலாற்றை எடுத்து சொல்லும் போது பயங்கர ஆச்சரியபடுகிறார்கள்.

இந்தப் படத்தின் மூலம் படிக்கத் தொடங்கியுள்ளனர். இந்தப் படத்திற்காக சோழர்கள் வரலாற்றை படித்து உள்ளனர். பொன்னியின் செல்வன், கல்கி குறித்தும் படிக்கின்றனர். ஒரு படத்திற்காக நம்ம ஊர் குறித்து படிக்கின்றனர் எனும் போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு திரைப்படத்தால் இவ்வளவு செய்ய முடிகிறது என ஆச்சரியமாக உள்ளது.

தேர்வுக்கு முன்னாடி எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட மனநிலை தான் இப்போது இருக்கிறது. நாம் எல்லாருமே இந்தியர்கள் தான் என்பதை உணர்கிறார்கள். பல வரலாறுகள் நாம் படிக்கவில்லை. இப்போது படிப்பதற்கு ஆர்வமாக உள்ளார்கள்.

’'Game of thrones'-ஐ விட நம் பொன்னியின் செல்வன் மேல்..!’ - கார்த்தி

தமிழில் இருந்த பல நல்ல படங்கள் அங்கு நன்றாக ஓடுவதால் நம்மை மதிக்கின்றனர். மணிரத்னம், ஏ. ஆர். ரகுமான் ஏற்கனவே இந்தியா முழுவதும் பிரபலமானவர்கள். நமக்கான அடையாளமாக இவர்கள் உள்ளனர். இங்கு உள்ளது போலவே மற்ற மாநிலங்களிலும் வரவேற்பு உள்ளது. முதலில் பான் இந்தியப் படம் எடுத்தவர் மணிரத்னம் தான்.

Game Of Thrones உடன் ஏன் பொன்னியின் செல்வன் படத்தை ஒப்பிடுகிறீர்கள் நாம் அதற்கும் மேல். நம்ம புகழை பேசுவோம்” என கூறினார்.

இதையும் படிங்க: அயோத்தியில் வெளியாகும் பிரபாஸின் ஆதிபுருஷ் பட டீசர்

ABOUT THE AUTHOR

...view details