இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், என ஓர் நட்சத்திரப் பட்டாளமே சேர்ந்து நடித்திருக்கும் படம் ’பொன்னியின் செல்வன்’. இந்தப் படத்தின் டீஸர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளிவரவுள்ளது எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது.