தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஆதித்த கரிகாலனாக விக்ரம்: வெளியானது ”பொன்னியின் செல்வன்” புதிய போஸ்டர் - karikala sozhan

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவுள்ள ’பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆதித்த கரிகாலனாக நடிக்கும் விக்ரமின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கரிகால சோழனாக விக்ரம்: வெளியானது ”பொன்னியின் செல்வன்” புதிய போஸ்டர்
கரிகால சோழனாக விக்ரம்: வெளியானது ”பொன்னியின் செல்வன்” புதிய போஸ்டர்

By

Published : Jul 4, 2022, 3:52 PM IST

Updated : Jul 4, 2022, 6:58 PM IST

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ”சோழர்கள் வருகிறார்கள்” என்னும் தலைப்புடன் பொன்னியின் செல்வன் படம் குறித்த அப்டேட் இந்த வாரம் வர உள்ளதாக வீடியோ வெளியானது.

இந்நிலையில் இன்று (ஜூலை 4) ’பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆதித்த கரிகாலனாக நடிக்கும் விக்ரமின் போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் தொடர்ந்து வரும் வாரத்தில் மற்ற கதாபாத்திங்களின் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:’காளி’ வாயில் சிகரெட்- சர்ச்சை கிளப்பும் லீனா மணிமேகலையின் ஆவணப்பட போஸ்டர்

Last Updated : Jul 4, 2022, 6:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details