தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்: பிரபலங்கள் வாழ்த்து! - பாபா

நடிகர் ரஜினிகாந்தின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்; குவியும் வாழ்த்துகள்
நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்; குவியும் வாழ்த்துகள்

By

Published : Dec 12, 2022, 12:14 PM IST

Updated : Dec 12, 2022, 12:49 PM IST

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் 'நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்' என நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நடிகரும் மக்கள் நீதி மைய தலைவருமான கமல்ஹாசன், நடிகர்கள் தனுஷ், சரத்குமார், குஷ்பூ, துல்கர் சல்மான், ஆகியோரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2002இல் வெளியான பாபா திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ரீரிலிஸ் ஆனதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துவரும் வரும் ஜெயிலர் படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: HBD Rajinikanth: சூப்பர் ஸ்டார் "ரஜினிகாந்த்" என்னும் ஒற்றை மந்திரம்.. பிறந்தநாள் சிறப்பு தொகுப்பு!

Last Updated : Dec 12, 2022, 12:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details