சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி, சட்டத்தை மீறி வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றெடுத்துள்ளதாக சர்ச்சைகள் கிளம்பி வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய மற்றும் மாநில சட்ட விதிகளை பின்பற்றாமல் வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் மீது வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், ‘மத்திய மற்றும் மாநில அரசுகள் வாடகை தாய் ஒழுங்குமுறை சட்டம் கொண்டு வந்துள்ளது. கர்ப்பபையில் பிரச்சனை, குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத சூழல் உள்ளிட்ட சில காரணங்களுக்காக மட்டுமே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று முறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதிகளின் படி வாடகை தாய் தேவை என்று மருத்துவ சான்றிதழை மாவட்ட மருத்துவ வாரியத்திடமிருந்து பெற வேண்டும்.