ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் டி.முருகானந்தம் தயாரிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிசாசு - 2 . கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்க, உடன் பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு, கார்த்திக் ராஜா இசையமைக்க, சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.