தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

’முத்துநகர் படுகொலை’ ஆவணப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது! - முத்துநகர் படுகொலை

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ‘முத்துநகர் படுகொலை’ ஆவணப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ’முத்துநகர் படுகொலை’ ஆவணப்படம் வெளியானது!
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ’முத்துநகர் படுகொலை’ ஆவணப்படம் வெளியானது!

By

Published : May 21, 2022, 7:30 PM IST

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றிய ஆவணப்படமான ‘முத்துநகர் படுகொலை’ திரைப்படம் ’www.tamilsott.com’ என்ற இணையதளத்தில் வெளியானது. 2017 ஆம் ஆண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டு தடையை கண்டித்து தமிழ்நாடு மட்டுமின்றி உலகெங்கும் நடந்த போராட்டத்தை நாச்சியாள் பிலிம்ஸ் நிறுவனம் 'மெரினா புரட்சி' என்ற ஆவணத்திரைப்படமாக தயாரித்திருந்தனர்.

அதை M.S.ராஜ் இயக்கியிருந்தார். கடும் போராட்டத்திற்குப் பிறகு தணிக்கை பெற்ற 'மெரினா புரட்சி' நார்வே,கொரிய திரைப்பட விழாக்களில் விருது பெற்றது. தற்போது நாச்சியாள் பிலிம்ஸும், தருவை டாக்கீஸும் இணைந்து 2018 மே மாதம் 22 & 23 தேதிகளில் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தை PEARLCITY MASSACRE (முத்துநகர் படுகொலை) என்ற பெயரில் புலனாய்வு ஆவணப்படமாகத் தயாரித்துள்ளனர். மெரினா புரட்சியை இயக்கிய M.S.ராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஆலைக்கு எதிராக அமைதியான முறையில் தங்களது போராட்டத்தை தொடங்கிய மக்கள் மீது மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் நடத்திய கொலைவெறித் தாக்குதலை அப்படியே உயிர்ப்புடன் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர். 13 உயிர்களை பலிவாங்கிய பின்னரும் தற்போது அங்குள்ள மக்கள் ஒருவித அச்ச உணர்வுடனே வாழ்கிறார்கள் என்பதை அவர்களது பேட்டியிலேயே உணர முடிகிறது.

படத்தை பற்றி இயக்குனர் M.S.ராஜ், "PEARLCITY MASSACRE(முத்துநகர் படுகொலை) புலனாய்வு ஆவணத்திரைப்படம் உண்மையில் மே22 & 23 தேதியில் நடந்த கொடூர சம்பவங்களை சாட்சியங்களுடன் பதிவு செய்திருக்கிறது. மேலும் அரச இயந்திரம் செய்த தவறுகளை ஆதாரங்களுடன் படமாக்கியுள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்த ஆவணப்படத்தை திரையிட்டோம். வழியும் கண்ணீரை துடைத்தபடியே படத்தை பாராட்டியவர்கள் விரைவில் நீதி வழங்க வேண்டும் என்று கோரி கையெழுத்திட்டனர். தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் (32 நாடுகளில்) இந்த படத்தை திரையிட்டு பார்வையாளர்களின் கையெழுத்துக்களை திரட்டி தமிழக அரசிடம் வழங்க இருக்கிறோம். நீதி கோரும் எங்களின் இந்த முயற்சிக்கு,இந்த பயணத்திற்கு ஊடகவியலாளர்களின் ஆதரவை பணிவுடன் வேண்டுகிறோம்." என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: ’பொன்னியின் செல்வன்’ சரியாக வரவில்லையா..? : அதிருப்தியில் மணிரத்னம்?!

ABOUT THE AUTHOR

...view details