தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

என் நாட்டை நேசிக்கிறேன்.. அரசாங்கத்தை அல்ல.. பி.சி. ஸ்ரீராம் ட்வீட்

சுதந்திர தினமான இன்று (ஆக.15), தான் இந்த நாட்டை மட்டுமே நேசிப்பதாகவும், அரசாங்கத்தை நேசிக்கவில்லை என்றும், பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அதிரடி ட்வீட் ஒன்று செய்துள்ளார்.

என் நாட்டை நேசிக்கிறேன்.., என் அரசாங்கத்தை அல்ல.., பி.சி. ஸ்ரீராம் ட்வீட்..
என் நாட்டை நேசிக்கிறேன்.., என் அரசாங்கத்தை அல்ல.., பி.சி. ஸ்ரீராம் ட்வீட்..

By

Published : Aug 15, 2022, 9:04 PM IST

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், தமிழ்திரையுலகில் ஒளிப்பதிவாளராக வேண்டும் என நினைக்கும் பலருக்கு மானசீக குருவாகத் திகழ்பவர். இந்தியத் திரையுலகிலேயே மிக முக்கியமான ஒளிப்பதிவாளர்கள் பட்டியலில் இவர் முன்வரிசையில் உள்ளர் எனக் கூறினால் அது மிகையாகாது.

இந்நிலையில், சுதந்திர தினமான இன்று(ஆக.15) இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் என் நாட்டை நேசிக்கிறேன், ஆனால் என் அரசாங்கத்தை அல்ல.., ஜெய்ஹிந்த்..!” எனப் பதிவிட்ட ட்விட்டர் பதிவு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இவர் ஏற்கனவே இதற்கு முன்பு பல முறை ஒன்றிய அரசிற்கு எதிரான தனது கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.

குறிப்பாக சமீபத்தில், ‘தமிழ் தான் இணைப்பு மொழி” என ஏ.ஆர்.ரகுமான் கூறிய கருத்திற்கு பாஜக ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போது, ஏ.ஆர்.ரகுமானிற்கு ஆதரவு தரும் வகையில், பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில், “தேசிய பறவையை தேர்வு செய்வதில் பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்தால் காகம் தான் நமது தேசியப்பறவையாக இருக்கும்” என்று அண்ணா கூறியதை மேற்கோள்காட்டி பதிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிரபலங்களின் சுதந்திர தின விழா வாழ்த்துகள் இதுதான்

ABOUT THE AUTHOR

...view details