தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

Actor Silambarasan: சிம்பு பிறந்தநாள் ஸ்பெஷல்.. பத்து தல முதல் பாடல் வெளியீடு! - பத்து தல முதல் பாடல்

நடிகர் சிம்புபின் பிரந்தநாளை முன்னிட்டு பத்து தல படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

பத்து தல முதல் பாடல் வெளியீடு
பத்து தல முதல் பாடல் வெளியீடு

By

Published : Feb 3, 2023, 11:45 AM IST

'சில்லுன்னு ஒரு காதல்' படத்தை இயக்கிய கிருஷ்ணாவின் இயக்கத்தில், நடிகர் சிம்பு 'பத்து தல' என்ற படத்தில் நடித்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக், கலையரசன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் கன்னடத்தில் நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'மஃப்டி' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். கடந்த சில மாதங்களுக்கு முன்னரே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் வரும் மார்ச் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இன்று நடிகர் சிம்புவின் 40 ஆவது பிறந்தநாளை ஒட்டி, பத்து தல படத்தின் முதல் பாடல் வெளியாகும் அறிவிக்கப்பட்டது. அதன் படி ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து பாடியுள்ள ‘நம்ம சத்தம்’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிபு நடிப்பில் முன்னதாக வெளியான வெந்து தணிந்தது காடு படம், திரையரங்குகளில் வெளியாகி ரசிகரகள் இடையே நல்ல வரவேற்பை பெற்று பெரும் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து பத்து தல படம் வெளியா உள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கூடியுள்ளது.

இதையும் படிங்க:இன்று வெளியாகிறது தளபதி 67 படத்தின் தலைப்பு..!

ABOUT THE AUTHOR

...view details