தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஷாருக்கான் பிறந்தநாள் பரிசாக வெளியாகிறது பதான் டீஸர்! - deepika padukone

ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள பதான் படத்தின் டீஸர், அவரது பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி வெளியாக உள்ளது.

ஷாருக்கான் பிறந்தநாள் பரிசாக வெளியாகிறது பதான் டீசர்
ஷாருக்கான் பிறந்தநாள் பரிசாக வெளியாகிறது பதான் டீசர்

By

Published : Oct 19, 2022, 6:03 PM IST

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கும் படம், பதான். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார்.

ஷாருக்கான் இந்தி சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆனதையொட்டி, சமீபத்தில் பதான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது பதான் படத்தின் டீஸர் நவம்பர் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. ஷாருக்கான் பிறந்த நாளை முன்னிட்டு பதான் படத்தின் டீஸர் நவம்பர் 2ஆம் தேதி வெளியாக உள்ளது.

ஒரு நிமிடங்கள் வரை இருக்கும் அந்த டீஸரில் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற உள்ளன. இதனை அறிந்த ஷாருக்கான் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். பதான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நடிகர் வருண் தவானின் ‘பெடியா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு...!

ABOUT THE AUTHOR

...view details