நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘பத்தல பத்தல’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றது. மேலும், இன்ஸ்டா ரீல்ஸ்களிலும் ரீங்காரமிட்டு சிறியவர் முதல் பெரியவர் வரை கமலின் ஸ்டெப்களை போட வைத்தது.
மறு பக்கம் ஒன்றிய அரசை விமர்சிக்கும் சில வரிகள் இருந்தமையால் லேசான சலசலப்புகளையும் ஆங்காங்கே ஏற்படுத்தியது.
இந்தப் பாடலின் முழு வீடியோ ‘விக்ரம்’ படத்தில் இடம்பெறாமல் இருந்த நிலையில், தற்போது அந்தப் பாடலின் முழு வீடியோ ஜூலை 1 அன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படுமென அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 20 Years of Panchathanthiram: மக்களால் இன்றளவும் கொண்டாடப்படும் தமிழ் சினிமாவின் 'கல்ட் காமெடி'