ஹைதராபாத்:பாலிவுட் நடிகர் ஷாருக் கான் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் பதான் திரைப்படம் உலகளவில் 11 நாள்களில் ரூ.780 கோடி வசூலை கடந்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.400 வசூலை எட்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வசூல் விவரங்களை யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகளில் மட்டும் ரூ.299 கோடி வசூலித்துள்ளது. பாலிவுட் சினிமா வசூல் வரலாற்றில் புதிய மைல் கல்லை பதான் படம் எட்டியதாக கூறப்படுகிறது. நடிகர் அமீர் கானின் தங்கல் படம் இந்தியாவில் மட்டும் ரூ.382 கோடி வசூலித்திருந்தது. இந்த சாதனையை பதான் 11 நாள்களிலேயே முறியடித்துள்ளது.
அண்மை காலமாக தென்னிந்திய திரைப்படங்கள் மட்டுமே வசூலில் சாதனை படைத்துவந்தன. கேஜிஎப், ஆர்ஆர்ஆர், காந்தாரா, விக்ரம் போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்திய அளவில் வெற்றிபெற்றன. இந்த படங்கள் வெளியானபோது பலிவுட் முன்னணி நடிகர்களின் பல படங்கள் வெளியானது. ஆனால், வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை.