மும்பை:இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவான திரைப்படம் பதான். இதில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம், சல்மான் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25 அன்று உலகமெங்கும் உள்ள 7,000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது.
ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வரும் இப்படம், முதல் நாளிலே 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. இந்த நிலையில் படத்தின் 2 நாள் வசூலுடன் சேர்ந்து 235 கோடியைத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியானபோது, தீபிகா படுகோனே அணிந்திருந்த கவர்ச்சி மிகுந்த காவி நிற பிகினி குறித்து சர்ச்சை எழுந்தது.