தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நடிகைகள் பார்வதி, நித்யாமேனன் கர்ப்பமா? ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய பதிவு! - Parvathy

நடிகைகள் நித்யா மேனன் மற்றும் பார்வதி திருவோது சமூக வலைதளங்களில் கர்ப்பமாக உள்ளதுபோன்று பதிவிட்டுள்ள தகவலால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

நடிகைகள் பார்வதி, நித்யாமேனன் கர்பம்? ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய பதிவு
நடிகைகள் பார்வதி, நித்யாமேனன் கர்பம்? ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய பதிவு

By

Published : Oct 28, 2022, 8:31 PM IST

Updated : Oct 28, 2022, 8:49 PM IST

ஹைதராபாத்: நடிகைகள் நித்யா மேனன் மற்றும் பார்வதி திருவோது கர்ப்பமாக உள்ளதாக, கர்ப்ப பரிசோதனைக்கருவி முடிவுகளின் புகைப்படத்தைப் பதிவு செய்துள்ளனர். இது அவர்களது ரசிகர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நித்யா மேனன் மற்றும் பார்வதியின் பதிவுகள் அவர்கள் கர்ப்பமாக இருப்பதை சுட்டிக்காட்டுகின்றன. அவர்கள் கர்ப்ப பரிசோதனைக்கருவி முடிவுகளின் புகைப்படத்தைப் பகிர்ந்தவுடன், சமூக ஊடகங்களில் அவர்களின் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

இதை நம்பிய ஒரு சிலர் எப்போது திருமணம் என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சிலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், ஒரு சிலர் குழம்பியுள்ளனர்.

நித்யா மேனன் மற்றும் பார்வதி திருவோது மட்டுமின்றி பத்மப்ரியா, அர்ச்சனா பத்மினி, சயனோரா பிலிப் மற்றும் அம்ருதா சுபாஷ் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் கர்ப்ப பரிசோதனையின் அதே புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர்.

இயக்குநர் அஞ்சலி மேனன் இயக்கத்தில் வரவிருக்கும் திரைப்படமான 'வொண்டர் வுமன்' படத்திற்கான புரொமோஷனுக்காகத் தான் நடிகர்கள் இந்தப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். இந்தப்படம் கர்ப்பமாக இருக்கும் பல பெண்களின் வாழ்க்கையைச்சுற்றி எடுக்கப்பட உள்ளதாகக்கூறப்படுகிறது.

இதையும் படிங்க:பொங்கலுக்கு வெளியாகிறது துணிவு; நீண்ட இடைவெளிக்குப்பிறகு மோதும் அஜித், விஜய்

Last Updated : Oct 28, 2022, 8:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details