நடிகரும், இயக்குநருமான ஆர்.பார்த்திபனின் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் "ஒத்த செருப்பு". இப்படம் விமர்சன ரீதியாக மிகுந்த பாராட்டை பெற்றது. பார்த்திபனின் குறிப்பிடத் தகுந்த படைப்புகளில் ஒன்றாக "ஒத்த செருப்பு" இருந்தது.
இதைத் தொடர்ந்து, அவர் இயக்கியுள்ள "இரவின் நிழல்" திரைப்படம், நான்-லீனியர் (Non linear)சிங்கிள் ஷாட் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மார்ச் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்களுடன் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.