பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி, நாளை வெளியாகவுள்ள ’இரவின் நிழல்’ படம் குறித்து இயக்குநர் பார்த்திபன் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இரவின் நிழல் படத்திற்கு உலகெங்கும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கண்கள் கலங்கும் அளவிற்கு காலை சிறப்புக் காட்சிகள் திரையிடப்படவுள்ளன. கமர்ஷியல் படங்களுக்கு மட்டுமே கிடைக்கும் மரியாதை தரமான படத்திற்கும் கிடைத்துள்ளது. ரசிகர்களின் ரசனை மாற்றத்தை மனதில் வைத்து இரவின் நிழல் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையின் கீழ் இப்படத்தை திரையிட உள்ளேன். உங்களின் வாட்ஸ் அப் குழுவில் இந்த ஆடியோவை பகிருங்கள். உங்களால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு டிக்கெட் வாங்கிக்கொடுங்கள். நாங்கள் ஏன் இப்படி பொதுச்சேவை செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். இதுபோன்ற படங்கள் அடுத்த பத்து ஆண்டுகளில் யாராவது ஒருவர் முயற்சிக்கலாம்.
கமர்ஷியல் படங்களுக்கு மட்டுமே கிடைக்கும் மரியாதை தரமான படத்திற்கும் கிடைத்துள்ளது - பார்த்திபன் நெகிழ்ச்சி இன்னும் இப்படம் ஓடிடியில் விற்கவில்லை. திரையரங்குகளில் இப்படத்தை மக்கள் ரசிப்பதை நான் கொண்டாட வேண்டும். இப்படத்தை நீங்கள் மிகப்பெரிய வெற்றிப் படமாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:’நட்சத்திரம் நகர்கிறது’ கதாபாத்திரங்கள் அறிமுகம்!