தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

’நானே வருவேன்’ என அடம்பிடித்து வந்தேன்...!  -  தனுஷை சீண்டும் பார்த்திபன் - நானே வருவேன் குறித்து பார்த்திபன்

”நானே வருவேன்" என்று அடம்பிடித்து இங்கு வந்தேன்” என்று சைடு கேப்பில் தனுஷை தனது பாணியில் சீண்டியுள்ளார் நடிகர் பார்த்திபன்.

’நானே வருவேன்’ என அடம்பிடித்து வந்தேன்...! - தனுஷை சீண்டும் பார்த்திபன்
’நானே வருவேன்’ என அடம்பிடித்து வந்தேன்...! - தனுஷை சீண்டும் பார்த்திபன்

By

Published : Sep 29, 2022, 8:54 PM IST

பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை(செப்.30) வெளியாகிறது. அதனையொட்டி இன்று(செப்.29) இப்படத்தின் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் விக்ரம், ஜெயம் ரவி, பார்த்திபன், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

’நானே வருவேன்’ என அடம்பிடித்து வந்தேன்...! - தனுஷை சீண்டும் பார்த்திபன்

அப்போது ஜெயம் ரவி பேசுகையில், “கல்கியின் ஆத்மா இன்று சாந்தியடையும். மணிரத்னத்தின் கனவு சாத்தியமாகியுள்ளது. நிச்சயம் இப்படம் உங்களுக்கு பிடிக்கும்” எனப் பேசினார்.

’நானே வருவேன்’ என அடம்பிடித்து வந்தேன்...! - தனுஷை சீண்டும் பார்த்திபன்

அதன்பின் விக்ரம் பேசுகையில், “இதுபோன்ற சரித்திர படங்களில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. எனது கனவு கதாபாத்திரத்தில் நடிக்க நான் தேர்வானது சந்தோஷமாக உள்ளது. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. இதுபோன்ற பல்வேறு நட்சத்திர பட்டாளங்களுடன் நடித்தது இதுதான் முதல் முறை.

இந்தியா முழுவதும் நிறைய வரலாற்று கதைகள் இருக்கின்றன. பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள அத்தனை கதாபாத்திரங்களும் மிகச் சிறந்தது. அவர்களுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி. பொன்னியின் செல்வன் கதை எழுதிய கல்கி உருவாக்கிய இந்த கதையில் நான் நடிப்பது ரொம்ப பெருமையாக உள்ளது.

மூன்று தலைமுறையினர் இந்த பொன்னியின் செல்வன் படத்தை காண ஆவலாக உள்ளது மிகப் பெருமையாக உள்ளது. ஒரே ஒரு வேண்டுகோள், வயதானவர்கள் பொன்னின் செல்வன் திரைப்படத்தை காண திரையரங்குக்கு வருகின்றனர். அவர்களுக்கு தகுந்த உதவியை தியேட்டர் உரிமையாளர்கள் செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.

பொன்னியின் செல்வன் ஹிட்டாக வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இது ஒரு தமிழ் கலாச்சாரத்தை பற்றிய படம் போர், காதல், பாசம் போன்ற மையக்கரு உள்ளது. ஆதித்த கரிகாலன் உடைய காதல் எனக்குள் நெருப்பாக இருந்து கொண்டிருக்கிறது. அவனுடைய காதலுக்காக அவன் என்ன வேணாலும் செய்வான் அதை உணர்ந்து நான் நடித்தேன் சிறந்த காதல் காவியமாக அமையும் என நினைக்கிறேன்” என்றார்.

நடிகை திரிஷா பேசுகையில், ”நம்ம சென்னையில் ஆரம்பமானது முடிப்பதும் சென்னையில் தான் ஏனென்றால் இது ஹோம் டவுன். படங்கள் ரிலீசுக்கு முன்பு படபடப்பு எப்போதும் இருக்காது. ஆனால் பொன்னியின் செல்வன் படத்திற்கு இருக்கிறது. இந்த மாதிரி நான் நடித்த படங்களில் எதற்குமே இந்த அளவிற்கு ப்ரமோஷனுக்காகச் சென்றதில்லை.

வட இந்தியாவிற்கு சென்றாலும் கூட தமிழ் படம் குறித்து அதிகமாக பேசுகிறார்கள் வரவேற்றார்கள். இயக்குனர் மணிரத்தினத்திற்கு ரொம்ப நன்றி. பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. பொன்னியின் செல்வன் படத்திற்காக நீங்கள் அனைவரும் பெருமை படுவீர்கள்” என்றார்.

இதையடுத்து, பார்த்திபன் மேடையில் பேசும்போது, ’நானே வருவேன்’ என்று அடம் பிடித்து விட்டு தான் இன்று பொன்னியின் செல்வன் பிரஸ் மீட்டுக்கு வந்தேன். தஞ்சாவூர் சென்று படத்தை பார்த்துவிட்டு ராஜராஜ சோழனுக்கு மரியாதை செலுத்தலாம் என்று இருக்கிறேன். ரொம்ப நாள் காதலித்த இந்த பொன்னியின் செல்வன் படம் இப்போது ஆடியன்ஸ்க்கு செல்கிறது. பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் அனைவரின் ரசிகன் நான்.

நம் வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். ஒரு ஆறு வாரத்திற்கு இந்த படத்தின் ஆரவாரம் எல்லா தியேட்டரிலும் இருக்கும் என்று நினைக்கிறேன். இதுவரைக்கும் எந்த படத்திற்கும் எவ்வளவு பெரிய பரபரப்பை பிரஷரை சந்தித்ததில்லை. இயக்குநர் மணிரத்தினம் மற்றும் துணை இயக்குனர்கள் ஆர்ட் டைரக்டர் என அனைவருக்கும் மிகப்பெரிய பாராட்டுக்கள். எல்லா படங்களும் கடைசியாக உங்களிடம் தான் வந்து சேரும். எனவே ஒரு முறை குறைவாக இந்த மாதிரி சரித்திர படங்களை பார்க்க வேண்டாம் என பத்திரிகையாளர்கள் சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இணையத்தில் வெளியிடத் தடை

ABOUT THE AUTHOR

...view details