சென்னை:தனது வித்தியாசமான படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் புதுமை இயக்குநகராக அறியப்படுபவர், இயக்குநர் பார்த்திபன். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படத்தை மிகவும் சிரமப்பட்டு ஒரே டேக்கில் அதாவது சிங்கிள் டேக் - நான் லீனியர் படமாக உருவாக்கியிருந்தார்.
இந்திய சினிமாவில் வெளியான முதல் நான் லீனியர் படம் இதுவே எனலாம். மேலும், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். பல்வேறு திரைப்பட விருது விழாக்களில் பங்கேற்று, ஏராளமான விருதுகளைப் பெற்றது இரவின் நிழல் திரைப்படம். இதனையடுத்து பார்த்திபன் தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்திற்கு இசை அமைக்க ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர் நிறைய படங்களில் பிஸியாக இருப்பதால் முடியாது என்று சொல்லி விட்டதாகவும், பார்த்திபன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது இந்த படத்திற்கு இமான் இசை அமைத்து வருகிறார். இதனை பார்த்திபன் தனது (X) எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, "வா.. வெனவாய் பிளந்து வரவேற்றுவாய் நனைய முத்தமிட்டு, இறுதிவரை இருக்க விரும்பிஇறுக அணைத்தாலும். திட்டமிட்டபடி சட்டென விட்டுவிலகி சென்றுவிடும். சென்ற வினாடிகள். தும்பைப் பூவின் மீது தூய்மையான பனித்துளி படர்ந்து தும்பிகளின் மெல்லிய ரீங்காரத்தைக் கூடமெலோடியாய் ரசிக்கும் சில உறவுகளும் பூப்பதுமுண்டு.