தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பிரிகிடாவின் செயலுக்கு மன்னிப்பு கேட்ட பார்த்திபன்!

இரவின் நிழல் படம் தொடர்பாக பிரிகிடா தெரிவித்த கருத்திற்கு நடிகர் பார்த்திபன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிரிகிடாவின் செயலுக்கு மன்னிப்பு கேட்ட பார்த்திபன்
பிரிகிடாவின் செயலுக்கு மன்னிப்பு கேட்ட பார்த்திபன்

By

Published : Jul 18, 2022, 12:52 PM IST

இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் உலகின் முதல் சிங்கிள் ஷாட் திரைப்படமான "இரவின் நிழல்" கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் பிரிகிடா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் படம் குறித்து பேட்டியளித்த அவர் சேரி குறித்து தவறான வார்த்தைகளை கூறியுள்ளார். அதாவது ”சேரிக்கு சென்றால் கெட்டவார்த்தைகள் தான் கேட்கமுடியும் என்று‌ கூறியிருந்தார். இவரின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதனை தொடர்ந்து தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். தவறாக இருந்தால் மன்னிக்கவும் என்று கூறியுள்ளார். பார்த்திபனும், பிரிகிடாவின் பேச்சினால் மனக்காயம் அடைந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

பிரிகிடாவின் செயலுக்கு மன்னிப்பு கேட்ட பார்த்திபன்
பிரிகிடாவின் செயலுக்கு மன்னிப்பு கேட்ட பார்த்திபன்

1989 ஆம் நடக்கும் கதை இது. 2022-இல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம். அவர்கள் பெற்ற கல்வியினால். என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை ஹீரோ ஆக்குவதே என பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.

பிரிகிடாவின் செயலுக்கு மன்னிப்பு கேட்ட பார்த்திபன்

இதையும் படிங்க:’தவறான சில விமர்சனங்கள் மனதிற்கு கஷ்டமாக உள்ளது..!’ - பார்த்திபன்

ABOUT THE AUTHOR

...view details