tripr என்டர்டெய்ன்மென்ட் சார்பில் மதுசூதனன் தயாரித்துள்ள திரைப்படம் 'பரோல்'. இப்படத்தை இயக்குநர் துவாரக் ராஜா இயக்கியுள்ளார்.
கார்த்தி, லிங்கா, கல்பிகா, மோனிஷா, ஜானகி சுரேஷ், வினோதினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அம்மாவின் இறுதிச்சடங்கிற்காக சிறையில் இருக்கும் தனது அண்ணனை பரோலில் எடுக்க முயற்சிக்கும் தம்பியின் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் நேற்று(நவ.10) பத்திரிகையாளர்களுக்கு சிறப்புக்காட்சி போடப்பட்டது. இதனைப்பார்த்த பத்திரிகையாளர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.