தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"ஒரு கோடை Murder Mystery" திரில்லர் வெப் சீரிஸ்: ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Thriller Web Series on ott

முன்னணி ஓடிடி தளமான ZEE5-ல் வெளியாக போகும், "ஒரு கோடை Murder Mystery" என்ற திரில்லர் வெப் சீரிஸின் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

oru Kodai Murder Mystery
ஒரு கோடை Murder Mystery

By

Published : Apr 19, 2023, 8:22 AM IST

சென்னை: தமிழில் தொடர்ந்து தரமான படைப்புகளைத் தந்து ரசிகர்களைக் கவர்ந்து வரும், இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தளம், தனது அடுத்த வெளியீடாக, "ஒரு கோடை Murder Mystery" என்ற திரில்லர் வெப் சீரிஸை வெளியிடுகிறது.

பள்ளி மாணவர்களின் வாழ்க்கைப் பின்னணியில், புதுமையான திரில்லராக இந்த வெப்சீரிஸ் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Sol Production Pvt.Ltd சார்பில் ஃபாசிலா அல்லானா, கம்னா மெனேசஸ் தயாரித்துள்ள இந்த வெப்சீரிஸை, இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். திரைக்கதை வசனத்தை N பத்மகுமார் மற்றும் ரோஹித் நந்தகுமார் எழுதியுள்ளனர்.

பள்ளியில் படித்து வரும் கூச்ச சுபாவம் கொண்ட இளைஞன் வியோம், அவனுக்கு தன்னுடன் வினாடி வினா நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் தாரா மீது ஈர்ப்பு வருகிறது. அவனும், தாராவும் சந்திக்கத் திட்டமிட்டிருந்த நாளில் தாரா காணாமல் போகிறாள். அதைத்தொடர்ந்து, தாராவின் உடல் ஏரியில் கிடைக்கிறது. தாரா மரணத்தால் உடைந்து போகும் வியோம், தனது நண்பர்களின் உதவியுடன் தாராவிற்கு என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க முயல்கிறான்.

மேலும் பரபரப்பான சுவாரஸ்யமான திருப்பங்களுடன் பள்ளி மாணவர்கள் துப்பறியும் ஒரு புதுமையான திரில்லராகவும், மலைநகர பின்னணியில் இந்த வெப்சீரிஸ் உருவாகியுள்ளது. நடிகை அபிராமி, ஆகாஷ், ஐஸ்வர்யா, ராகவ், ஜான், நம்ரிதா, அபிதா, பிராங்கின், சில்வன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

"அயலி", "செங்களம்" வெப் சிரீஸ்களின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து தற்போது ZEE5 தளத்தின் அடுத்த வெளியீடாக, இந்த "ஒரு கோடை Murder Mystery" வெப் சீரிஸ் வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. அதிரடி திருப்பங்களுடன் பரபரப்பான அனுபவம் தரும் இந்த வெப் சீரிஸை ZEE5 தளத்தில் 2023 ஏப்ரல் 21 முதல் காணலாம். இந்த வெப் சீரிஸ் பார்வையாளர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை தரும்.

இதையும் படிங்க: சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய நபருக்கு சாகும் வரை சிறை!

ABOUT THE AUTHOR

...view details