லாஸ் ஏஞ்சல்ஸ்: கோல்டன் குளோப் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஹாலிவுட் மற்றும் வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024ஆம் ஆண்டுக்கான 81வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய ஓப்பன்ஹெய்மர் மற்றும் கிரேடா கெர்விக் இயக்கிய பார்பி ஆகிய படங்கள் இந்த ஆண்டு அதிக பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட படங்களாகும். சிறந்த நடிகருக்கான விருதை சிலியன் மர்ஃபி (cillian murphy) ஓப்பன்ஹெய்மர் (oppenheimer) படத்திற்காக வென்றார். சிறந்த நடிகைக்கான விருதை poor things படத்திற்காக எம்மா ஸ்டோன் வென்றார்.
அதிக வசூல் செய்த பார்பி (barbie) திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த படமாக தேர்வு செய்யப்பட்டது. சிறந்த இயக்குநருக்கான கோல்டன் குளோப் விருதை ஓப்பன்ஹெய்மர் படத்திற்காக கிறிஸ்டோஃபர் நோலன் வென்றார். கிறிஸ்டோஃபர் நோலன் வென்ற முதல் கோல்டன் குளோப் விருது இதுவாகும்.
Anatomy of a fall என்ற பிரான்ஸ் நாட்டு திரைப்படம் சிறந்த வெளிநாட்டு படத்திற்கான விருதை வென்றது. சிறந்த திரைக்கதைக்கான கோல்டன் க்ளோப் விருதையும் anatomy of a fall திரைப்படம் வென்றது. சிறந்த பின்னணி இசைக்கான விருதை ஓப்பன்ஹெய்மர் படத்திற்காக லுட்விக் கோரன்சன் வென்றார். பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் ஓப்பன்ஹெய்மர் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார்.
ராபர்ட் டவுனி ஜூனியர் short cuts, ally mcbeal, sherlock holmes ஆகிய படங்களுக்கு பிறகு கோல்டன் குளோப் விருது வென்றுள்ளார். அதேபோல் நடிகை டா’ வின் ஜாய் ராண்டால்ஃப் the holdovers என்ற படத்திற்காக மோஷன் பிக்சர்ஸ் பிரிவில் சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார்.
சிறந்த தொலைக்காட்சி தொடராக the bear தேர்வு செய்யப்பட்டது. தொலைக்காட்சியில் சிறந்த துணை நடிகருக்கான கோல்டன் குளோப் விருதை மேத்யூ மேக்ஃபாதியின் succession தொடருக்காக வென்றார். தொலைக்காட்சியில் சிறந்த துணை நடிகைக்கான கோல்டன் குளோப் விருதை எலிசபெத் டெபிக்கி crown தொடருக்காக வென்றார்.
இதையும் படிங்க:இந்தியை படிக்க வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை - நடிகர் விஜய் சேதுபதி