தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

Oppenheimer: கிறிஸ்டோபர் நோலனின் "ஓப்பன்ஹெய்மர்" - இந்தியாவில் முதல் வார வசூல் எவ்வளவு தெரியுமா? - ஓப்பன்ஹெய்மர் ஹீரோ

ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ஓப்பன்ஹெய்மர் திரைப்படம், இந்தியாவில் முதல் வாரத்தில் 70 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது.

Oppenheimer
ஓப்பன்ஹெய்மர்

By

Published : Jul 28, 2023, 4:26 PM IST

ஹைதராபாத்:ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் முக்கியமானவர், கிறிஸ்டோபர் நோலன் (Christoper Nolan). இவர், இன்டர்ஸ்டெல்லர், இன்ஷெப்சன், பேட்மென் பிகின்ஸ், டன்கிரிக், தி ப்ரஸ்டீஜ் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இப்படங்கள் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றன. திரைக்கதையில் தனக்கென தனி பாணியைக் கொண்ட கிறிஸ்டோபர் நோலனுக்கு இந்தியா உள்பட பல நாடுகளிலும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

இவர் இயக்கிய "டெனெட்" திரைப்படம் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, கிறிஸ்டோபர் நோலன் "ஓப்பன்ஹெய்மர்" (Oppenheimer) படத்தை இயக்கியுள்ளார். இப்படம், இரண்டாம் உலகப் போரின்போது அணுகுண்டு தயாரிக்க உதவிய அமெரிக்க விஞ்ஞானி ராபர்ட் ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றுப் படமாகும். இதில், ஜப்பானின் ஹிரோஷிமா - நாகசாகி மீது அமெரிக்கா வீசிய உலகின் முதல் அணுகுண்டு பற்றியும், அந்த அணுகுண்டை உருவாக்கிய விஞ்ஞானி ஓப்பன்ஹெய்மர் பற்றியும் பேசப்பட்டுள்ளது.

இப்படம் கடந்த 21ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதில் ஓப்பன்ஹெய்மரும் அவரது தோழியும் உடலுறவு கொள்ளும் தருணத்தில் பகவத் கீதையின் வரிகளை ஹெய்மர் கூறுவதுபோல காட்சி இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக இந்தியாவில் ஓப்பன்ஹைய்மர் திரைப்படம் வசூலை வாரிக் குவித்துள்ளது. இப்படம் இந்தியாவில் முதல் நாளில் மட்டும் 13 கோடி ரூபாயை வசூலித்தது. முதல் ஆறு நாட்களில் 67.85 கோடி ரூபாயும், ஏழாவது நாளில் 5.25 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. மொத்தமாக ஒரு வாரத்தில் 73.15 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஓப்பன்ஹெய்மருடன் வெளியான ’பார்பி’ திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. உலகளவில் ஒப்பிட்டால், ஓப்பன்ஹெய்மரை விட ’பார்பி’ திரைப்படம் அதிகளவில் வசூல் வேட்டையில் ஈடுபட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் தனது இரண்டாவது வாரத்தை நிறைவு செய்யவுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இன்று(ஜூலை 28) பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹரின் "ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி" திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆலியா பட் மற்றும் ரன்வீர் சிங் நடித்துள்ள காதல் திரைப்படமான இது, இந்தியாவில் ஓப்பன்ஹெய்மரின் வசூலை பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சென்னையில் Oppenheimer படம்‌ பார்க்க சிறந்த தியேட்டர் எது? ஒரு சிறப்புப் பார்வை!

ABOUT THE AUTHOR

...view details