சென்னை:இயக்குநர் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் கொமரம் பீமாக வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்திய ஜூனியர் என்டிஆர் இன்று (மே 20) 39ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான என்டிஆர்.30 படத்தில், இயக்குநர் கொரட்டாலா சிவாவுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார்.
இதற்கு முன்னதாக “ஜனதா கேரேஜ் (2016) படத்தில் நடித்திருந்தார். ஆர்ஆர்ஆர் படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு என்டிஆர் - கொரட்டாலா சிவா படத்தின் மீதுதான் மிகப்பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. "இது ஒரு உணர்ச்சிகரமான கதைகளத்துடன், மிகவும் சக்திவாய்ந்த திரைக்கதை கொண்டது" என்று இயக்குநர் கொரட்டாலா சிவா ஒரு பேட்டியின் போது கூறியுள்ளார்.
கொரட்டாலா சிவா, ஜூனியர் என்டிஆரின் என்டிஆர் 30க்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். என்டிஆர் நடித்த படத்தை லைம்லைட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதால், படத்தின் எந்த ஒரு அம்சத்தையும் அவர் எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
என்டிஆர் பிறந்தநாளில் என்டிஆர் ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் இருக்கும் என்று சமீபத்தில் இயக்குனர் கொரட்டாலா சிவா தெரிவித்தார். ரசிகர்களின் கொண்டாட்ட பெருநாள் இன்று விடிகிறது, சமூக ஊடகங்களில் ரசிகர்களின் வெறித்தனம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது.
ரசிகர்களின் ஆவலை கூட்ட, என்டிஆர் 30இன், தயாரிப்பாளர்கள் ஒரு பிரம்மாண்டமான மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இப்போஸ்டரில் என்டிஆர் கர்ஜனை குரலில் மாஸ் டயலாக்கை பேச, அனிருத் நரம்பு துடிக்கும் பின்னணி இசையில் அதிரவைக்கிறார். எமோஷனுக்கான வசனங்களை உச்சரிப்பதில் என்டிஆர் சிறந்து விளங்குபவர் என்பது அனைவரும் அறிந்ததே.