தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பாராட்டு மழையில் 'O2' திரைப்பட ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்! - kollywood

வெங்கட் பிரபுவின் ’மன்மதலீலை’ படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் 18 நாட்களில் முடித்து கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்திய ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன், தனது அடுத்த படமான ’O2’ மூலம் கோலிவுட் மட்டும் இன்றி ஒட்டு மொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்

பாராட்டு மழையில் ’O2’ திரைப்பட ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்!
பாராட்டு மழையில் ’O2’ திரைப்பட ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்!

By

Published : Jun 21, 2022, 8:05 PM IST

வெங்கட் பிரபுவின் 'மன்மதலீலை' படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் 18 நாட்களில் முடித்து கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்திய ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன், தனது அடுத்த படமான 'O2' மூலம் கோலிவுட் மட்டும் இன்றி ஒட்டு மொத்த இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

அறிமுக இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் நயன்தாரா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ’O2’ திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதோடு, ஊடகங்களின் பாராட்டையும் பெற்றுள்ளது.

மண்சரிவில் சிக்கிக்கொள்ளும் பேருந்து ஒன்று முழுமையாக மண்ணுக்குள் புதைந்துவிட, அதனுள் இருக்கும் பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டார்களா இல்லையா, என்பது தான் 'O2' படத்தின் கதை. திரையில் மிக தத்ரூபமாக கொண்டு வந்து படம் பார்ப்பவர்களையும் பதற வைத்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்.

படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்களும், ரசிகர்களும் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ஆச்சரியத்தோடு பார்ப்பதோடு, படத்தில் நடக்கும் சம்பவங்கள் தங்களுக்கு நடப்பது போன்ற உணர்வைத் தருகிறது என்று சொல்வதோடு ஒளிப்பதிவாளரின் உழைப்பும், அவரது திறமையும் தான் அத்தகைய உணர்வுக்கு மிக முக்கியக் காரணம் என்றும் பாராட்டி வருகிறார்கள்.

பாராட்டு மழையில் ’O2’ ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்!

ரசிகர்கள் நம்பும்படி காட்சிகள் இருக்கவேண்டும்:இதுகுறித்து தமிழ் அழகன் கூறும்போது, 'இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ் என் நண்பர். அவர் இந்த கதையை என்னிடம் 2019ஆம் ஆண்டு சொன்ன போதே நான் கதையோடு பயணிக்கத் தொடங்கிவிட்டேன். ரசிகர்கள் நம்பும் வகையில் காட்சிகள் இருக்க வேண்டும்.

அப்போது தான் படம் ரசிகர்களிடம் சென்றடையும் என்பதை முன்பே முடிவு செய்ததோடு, அதை எப்படி சாத்தியமாக்குவது என்பதை சிந்திக்கத் தொடங்கிவிட்டேன். பிறகு படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதை அறிந்தவுடன், எனது பணியை தீவிரப்படுத்தத் தொடங்கினேன்.

'சுமார் 2 ஆண்டுகள் முன்பே இப்படத்திற்காக பணியாற்றத்தொடங்கிவிட்டேன்': பேருந்து மற்றும் மண் சரிவு காட்சிகள் செட் அமைக்கப்பட்டு அதன் மூலம் படமாக்கப்பட்டாலும், படம் பார்ப்பவர்களுக்கு செட் என்பது தெரியக்கூடாது மற்றும் பேருந்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களின் பதற்றம் ரசிகர்களுக்கு வர வேண்டும். இந்த இரண்டையும் சரியாக செய்துவிட்டால் படம் நிச்சயம் ரசிகர்கள் மனதில் நின்றுவிடும் என்பதால், அதற்கான பணியில் தீவிரம் காட்டினேன். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக சுமார் 2 ஆண்டுகள் இப்படத்திற்காக நான் பணியாற்றத் தொடங்கிவிட்டேன்.

படம் முழுவதும் கேமராவை தோளில் வைத்து தான் காட்சிகளை படமாக்கினேன். இது ரொம்ப சிரமமான விஷயம் என்றாலும் படத்திற்கு அது தான் மிக முக்கியம். உயிருக்காகப் போராடும் ஒரு கதாப்பாத்திரத்தின் உணர்வுகளை ரசிகர்களிடம் கடத்த வேண்டும். அதேபோல் ஒரு பயணியின் பதற்றமான சூழ்நிலை மற்றும் பயம் போன்ற உணர்வுகளை மிகச்சரியாக ரசிகர்களிடம் கடத்த வேண்டும் என்பதால், நானும் பேருந்தில் சிக்கிக்கொள்ளும் ஒரு கதாப்பாத்திரமாகவே பணியாற்றினேன்' என்றார்.

18 நாட்களில் ’மன்மதலீலை’ படத்தின் முழு படப்பிடிப்பையும் முடித்து பாராட்டு பெற்ற ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன், ’O2’ படத்தின் மூலம் ஒளிப்பதிவில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டிருக்கிறார் என்றால் அது மிகை இல்லை. நிச்சயம் இந்த படத்தின் மூலம் பல அங்கீகாரங்களை மட்டும் இன்றி பல விருதுகளையும் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன் பெறப்போவது உறுதி என்று ஊகடங்கள் பாராட்டி வருவதால், அவர் சந்தோஷமடைந்துள்ளார்.

இதையும் படிங்க: இந்த வாரம் (ஜூன் 24) ரிலீஸ் படங்களின் பட்டியல்!

ABOUT THE AUTHOR

...view details