கதைக்களத்திற்கு முக்கியத்துவம் தரக்கூடிய வகையிலான படங்களைத் தயாரித்து வரக்கூடிய ரௌடி பிக்சர்ஸ், விக்னேஷ் சிவன் தனது புதிய படமான 'NT81'ஐ தற்போது அறிவித்துள்ளார். 'எதிர் நீச்சல்', 'காக்கிச் சட்டை', 'கொடி' மற்றும் 'பட்டாஸ்' ஆகிய படங்களை இயக்கிய ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படம் குறித்து இயக்குநரும் ரௌடி பிக்சர்ஸின் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் கூறுகையில், "லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். தனித்துவமான புத்திசாலித்தனமான கதைகளை வெற்றிப்படங்களாக கொடுத்த இயக்குநர் துரை செந்தில்குமாருடன் இணைவதில் மகிழ்ச்சி.
'எதிர் நீச்சல்' படத்தில் அத்லெட்டாக வந்த சாந்தி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். நயன்தாராவின் 81ஆவது படத்திற்கான கதையை அவர் கூறியபோது பார்வையாளர்களுக்குப் பிடித்த பல அம்சங்கள் இருந்தன. ஒரு எனர்ஜியுடன் படக்குழுவுடன் பணியாற்ற படத்தின் மற்றத் தொழில்நுட்பக் குழு குறித்து விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.