தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'கடவுளின் பெயரால்...' மாநிலங்களவையில் பதவியேற்றார் இளையராஜா! - Parliament Monsoon Season

மாநிலங்களவை நியமன எம்.பி.யாக இசையமைப்பாளர் இளையராஜா இன்று (ஜூலை 25) தமிழில் பதவியேற்றுக்கொண்டார்.

NOMINATED MP ILAYARAJA TOOK OATH IN RAJYA SABHA
NOMINATED MP ILAYARAJA TOOK OATH IN RAJYA SABHA

By

Published : Jul 25, 2022, 3:06 PM IST

Updated : Jul 25, 2022, 3:21 PM IST

டெல்லி: மாநிலங்களவை நியமன எம்.பி.யாக இசையமைப்பாளர் இளையராஜா கடந்த ஜூலை 6ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டார்.

அவருடன் தடகள வீராங்கனை பிடி உஷா, சமூக ஆர்வலரான வீரேந்திர ஹெக்டே, இயக்குநர் ராஜமவுலியின் தந்தையும் திரைக்கதை ஆசிரியருமான விஜயேந்திர பிரசாத் உள்ளிட்டோர் மாநிலங்களவை நியமன எம்.பி.,யாக நியமிக்கப்பட்டனர்.

தற்போது, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இளையராஜா எம்.பி., ஆக மாநிலங்களவையில் இன்று (ஜூலை 23) பதவியேற்றுக்கொண்டார். மாநிலங்களவைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்ட இளையராஜா, 'கடவுளின் பெயரால்' என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்தார்.

'கடவுளின் பெயரால்...' மாநிலங்களவையில் பதவியேற்றார் இளையராஜா!

நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து:முன்னதாக, புதிய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு இன்று (ஜூலை 25) நாடாளுமன்றத்தில் பதவியேற்ற நிலையில், மாநிலங்களவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. இதனால், மதியம் 2 மணிக்கு மேல் அவை தொடங்கியது.

மேலும், உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப்பதக்கம் பெற்ற நீரஜ் சோப்ராவுக்கு மாநிலங்களவையில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:Video: குதிரைப்படைகள் சூழப் பாரம்பரிய முறையில் அழைத்து வரப்பட்ட முர்மு!

Last Updated : Jul 25, 2022, 3:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details