செரா கலையரசன் இயக்கத்தில் காக்கா முட்டை விக்னேஷ், ஆரா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் குழலி. முக்குழி பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று இப்படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இப்படத்தின் இயக்குநர் செரா கலையரசன் கண்ணீர் மல்க தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ”சிறிய படம் பெரிய படம் என்ற வேறுபாடு இல்லை. என்னை பொறுத்த வரை எனக்கு என் படம் தான் பெரிய படம். சிறிய படங்களுக்கு திரையரங்குகள் கொடுக்க திரையரங்க உரிமையாளர்கள் மறுக்கின்றனர்” என்று தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.