நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஜெயிலர். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவர் அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருவதால், அவருக்கு பதில் வேறு நடிகரை நெல்சன் தேர்வு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி படத்தில் சிவகார்த்திகேயன் இல்லையா? - No Sivakarthikeyan in Rajini Movie
ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் இப்படத்தில் நடிக்கவில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
ரஜினி படத்தில் சிவகார்த்திகேயன் இல்லையா
அதன்படி சிவகார்த்திகேயன் நடிக்க இருந்த கேரக்டரில் நடிகர் வசந்த் ரவி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே ராம் இயக்கிய தரமணி, அருண் மாதேஸ்வரன் இயக்கிய ராக்கி ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றபோதிலும் சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க:'சோழத்து பெருமை சொல்ல சொல் பூத்து நிக்கும்..!' - 'பொன்னி நதி' முதல் பாடல் வெளியீடு!