சென்னை: பருத்திவீரன் படப் பிரச்சனை கடந்த சில நாட்களாக சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகி வருகிறது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் யூடியுப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இயக்குநர் அமீர் பருத்திவீரன் படம் இயக்கிய போது தன்னை ஏமாற்றி பொய் கணக்கு காட்டி பல லட்சங்கள் சம்பாதித்து, ஏமாற்றி விட்டதாகவும், அவர் ஒரு திருடன் எனவும் கூறியிருந்தார்.
இவ்வாறு ஞானவேல் ராஜா பேசிய விவகாரம் தமிழ் சினிமாவில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் அமீர் அறிக்கை வெளியிட்ட நிலையில், அவருக்கு சசிகுமார், சமுத்திரகனி, பொன்வண்ணன் உள்ளிட்டோர் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.